புதிய ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிறார் !நீதித்துறை சிறைச்சாலை 
விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் கலந்துரையாடி உரிய தீர்மானம் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் கொழும்பு டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ சிறப்புரையை நிகழ்த்தியிருந்தார். அந்த கூட்டத்தில் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


பண்டாரநாயக்க கொள்கை கட்சியின் ஆரம்பம் மற்றும் பரிணாம வளர்ச்சி ஐம்பெரும் சக்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தான் உரை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வருகை தந்திருந்தனர்
புதிய ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிறார் ! புதிய ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிறார் ! Reviewed by Madawala News on April 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.