தமக்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணை கைது செய்த அதிகாரி #இலங்கைஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸுக்கு அழைத்து வந்துள்ளார்.


சந்தேக நபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
தமக்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணை கைது செய்த அதிகாரி #இலங்கை தமக்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணை கைது செய்த அதிகாரி  #இலங்கை Reviewed by Madawala News on April 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.