வீடு எரிந்து கணவன் உயிரிழந்த சம்பவ விசாரணையில் 33 வயது மனைவி மற்றும் 63 வயது காதலன் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைதுகணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் கள்ளக்காதலனும் பொலிஸாரால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.


உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (11) அக்கரைப்பற்று வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்து.

பிரேத பரிசோதனையில் கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயதுடைய மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
வீடு எரிந்து கணவன் உயிரிழந்த சம்பவ விசாரணையில் 33 வயது மனைவி மற்றும் 63 வயது காதலன் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது வீடு எரிந்து கணவன் உயிரிழந்த சம்பவ விசாரணையில் 33 வயது மனைவி மற்றும் 63 வயது காதலன் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது Reviewed by Madawala News on April 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.