விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 முதல் 35 மரணங்கள் பதிவாவதாக அறிக்கை .


 

விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32  முதல்  35 மரணங்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.  


ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.


வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விஷம் அருந்துதல் போன்ற சம்பவங்களினால் உயிரிழப்புகள் அதிகம்  ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 முதல் 35 மரணங்கள் பதிவாவதாக அறிக்கை . விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32  முதல்  35 மரணங்கள் பதிவாவதாக அறிக்கை . Reviewed by Madawala News on April 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.