கணவரை கைவிட்டு விட்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்த பெண், பொலிஸாரால் கைது .‛ஓரினச்சேர்க்கை' மோகத்தால் கணவரை விட்டுவிட்டு அவரது நெருங்கிய உறவுக்காரரின் மகளான 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கணவன் - மனைவி போல் வாழ்ந்த 24 வயது இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் அருகே பாரூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட உமர்காலி கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளைஞர். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த இளைஞர் 24 வயது இளம்பெண்ணை கரம் பிடித்தார்.


இந்நிலையில் தான் இளம்பெண்ணுக்கும், கணவருக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரரின் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் நெருக்கமாக மாறி உள்ளது.


இதற்கிடையே தான் கடந்த பெப்ரவரி மாதம் 27 ம் திதி திடீரென்று திருமணமான இளம்பெண் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோர் மாயமாகினர்.


அனைத்து இடங்களிலும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இருவரும் மாயமாகி ஒரு மாதம் கடந்தாலும் கூட பொலிஸாரால் அவர்கள் 2 பேரையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.


இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே தான் கடந்த வாரம் 2 பேரையும் ​பொலிஸார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்துக்கு ஓரினச்சேர்க்கை தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி பாரூட் பொலிஸார் நிலையத்தின் பொறுப்பாளர் ரிதேஷ் யாதவ் கூறியதாவது:


‛‛பாதிக்கப்பட்ட 16 வயது நிரம்பிய மைனர் பெண்ணிடம் விசாரணை நடத்தினோம். அவர் கூறிய தகவல்களை பதிவு செய்துள்ளோம். அதாவது 24 வயது இளம்பெண்ணுக்கு ஓராண்டு முன்பு திருமணமாகி உள்ளது அதன்பிறகு கணவரின் நெருங்கிய உறவுக்காரின் 16 வயது சிறுமியுடன் அவர் பழகி உள்ளார். இதில் திருமணமான 24 வயது பெண் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் (லெஸ்பியன்) என தெரிவித்துள்ளார்.


இதையடுத்து கணவரின் உறவுக்கார 16 வயது சிறுமியின் மீதான மோகத்தால் அவரை ஏமாற்றி தாம்நோட் மற்றும் இந்தூருக்கு அழைத் சென்றுள்ளார். இந்த வேளையில் திருமணம் செய்து கணவன்-மனைவி போல் அவர் வாழ்ந்துள்ளார். தற்போது கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருமணமான 24 வயது பெண்ணை கைது செய்துள்ளோம்'' என்றார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கணவரை கைவிட்டு விட்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்த பெண், பொலிஸாரால் கைது . கணவரை கைவிட்டு விட்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்த பெண்,  பொலிஸாரால் கைது . Reviewed by Madawala News on April 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.