VIDEO > கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சுமார் 180 பேர் கொண்ட முஸ்லிம்கள் குழுவாக வருகை தந்திருந்தனர்.



 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க  ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

ஜெனரல் எகொடவெல கோட்டாபய ராஜபக்சவை யாரையும் சந்திக்க அனுமதிக்காமல் சிறை போல் வைத்திருந்ததாகவும்   அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாடாவும் இந்த Game இல் விளையாடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Youtube  சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் 150 முதல் 180 பேர் கொண்ட குழுவொன்று மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை சுற்றி வளைத்ததாகவும் மேலும் கோட்டாபய ராஜபக்சவை  கொலை  செய்ய ஆயத்தங்கள்  நடந்ததாகவும், அதற்காக அங்கு முஸ்லிம்களே வந்து  இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

VIDEO > கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சுமார் 180 பேர் கொண்ட முஸ்லிம்கள் குழுவாக வருகை தந்திருந்தனர். VIDEO > கோட்டாபய ராஜபக்சவை  கொலை  செய்ய சுமார் 180 பேர் கொண்ட முஸ்லிம்கள் குழுவாக வருகை தந்திருந்தனர். Reviewed by Madawala News on March 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.