நடிகை மகேஸி மதுங்காவிடம் இரண்டாயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரிய, ஹிரு Tv மற்றும் ரெய்னோ டி சில்வா இலங்கையின் முன்னணி நடிகையான மகேஸி மதுங்காவிடம் இரண்டாயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி ஊடக வலையமைப்பு ஹிரு Tv  தலைவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


சட்டத்தரணி ஊடாக நிபந்தனைக் கடிதம் ஒன்றின் மூலம் ஹிரு  ஊடக நிறுவனத்தின் தலைவரான ரெய்னோ டி சில்வா இரண்டாயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.


தமது ஊடக நிறுவனத்திற்கும், தமக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களின் வாயிலாக பிரச்சாரம் செய்தாக மகேஸி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.


குறிப்பிட்ட நட்டஈட்டுத் தொகையை செலுத்தத் தவறினால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக மகேஸி குறித்த ஊடக நிறுவனத்தின் மீதும் ஊடக நிறுவனத் தலைவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.


தமது நிர்வாண புகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டுவதகாவும், கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பில் அண்மையில் அவர் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் மகேஸி மதுங்காவிடம் இரண்டாயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரி ரெய்னோ சில்வா கடிதம் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை மகேஸி மதுங்காவிடம் இரண்டாயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரிய, ஹிரு Tv மற்றும் ரெய்னோ டி சில்வா நடிகை மகேஸி மதுங்காவிடம் இரண்டாயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரிய,  ஹிரு Tv   மற்றும் ரெய்னோ டி சில்வா Reviewed by Madawala News on March 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.