இது RCB அணியின் புதிய அத்தியாயம் - மேலும் என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது ; விராட் கோஹ்லிநடப்பு ஐ.பி.எல் சீசனில் நாளை மறுதினம் (Mar.22) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சீசனின் தொடக்கப் போட்டியில் விளையாட உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த சூழலில் அந்த அணியின் அன்பாக்ஸ் நிகழ்வில் கோலி உட்பட அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். .


கடந்த 16 சீசன்களாக ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத அணியாக ஆர்.சி.பி உள்ளது. இந்த முறை அந்த அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அண்மையில் முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்.சி.பி பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.


பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கோலி பேச வந்தபோது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் விண்ணை தாண்டும் அளவுக்கு ஆரவாரம் செய்து அவர் வரவேற்றனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சொல்லி கோலி பேசினார். “இது ஆர்சிபி அணியின் புதிய அத்தியாயம்” என அவர் கன்னடத்தில் பேசி கவனம் ஈர்த்தார்.

மேலும் "என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது. இனிமேல் என்னை விராட் என அழைத்தால் போதும்" என்று தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர், 16 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என குறிப்பிடத்தக்க சாதனைகளை தன் வசம் கோலி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எனவும் மாற்றப்பட்டுள்ளது.
இது RCB அணியின் புதிய அத்தியாயம் - மேலும் என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது ; விராட் கோஹ்லி இது RCB அணியின் புதிய அத்தியாயம் - மேலும் என்னை கிங் என சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் அப்படி கூறும்போது எனக்கு கூச்சமாக உள்ளது ; விராட் கோஹ்லி Reviewed by Madawala News on March 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.