P H I ரொஷான் குமாரவை யார் கொன்றார்கள் என்று இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.



கரந்தெனிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரொஷான் குமாரவின் படுகொலை தொடர்பில் இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
தெரிவித்தார்.


கொலைச் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பல்வேறு கோணங்களில் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


விசாரணைக்காக பல புலனாய்வு அதிகாரிகள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கரந்தெனிய பொதுச் சுகாதார பரிசோதகர் கடந்த மாதம் 26ஆம் திகதி எல்பிட்டிய திவிதுருகம வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரொஷான் குமாரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

இதேவேளை, இக்கொலை தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
P H I ரொஷான் குமாரவை யார் கொன்றார்கள் என்று இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. P H I ரொஷான் குமாரவை யார் கொன்றார்கள் என்று இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. Reviewed by Madawala News on March 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.