ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த யுவதி - ஆற்றில் பாய்ந்து காப்பாற்றிய இளைஞர் குழுஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் உயிரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.


நேற்று (29) மாலை 7.00 மணியளவில் மஹியங்கனை - கண்டி ஏ26 வீதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே வெரகங்தொட்ட பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார் யுவதி.


பாலத்தின் கான்கிரீட் வேலியில் ஏறி ஆற்றில் குதிக்கப் போவதைக் கண்டு, அருகில் இருந்த இளைஞர்கள் குழு ஒன்று அவளைப் பிடிக்க விரைந்து வந்த நிலையில் அவர் ஆற்றில் குதித்ததுள்ளார்.


பின்னர், இளைஞர்கள் குழு அவரை ஆற்றில் இருந்து வெளியேற்றி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


அதன் போது மஹியங்கனை பொலிஸாருக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் மற்றும் ஹசலக்க பொலிஸாருக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்த போதிலும், அம்புலன்ஸ்கள் வருவதற்கு 45 நிமிடங்களுக்கு மேல் ஆனது.


எனவே, வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் ஏற்றி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இளம்பெண் ஆற்றில் குதிக்க முதலில் வந்த சைக்கிள் மற்றும் அவரது கைத்தொலைபேசி பாலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.


அதன்படி, போலீசார் தலையிட்டு, தொலைபேசியில் உள்ள எண்களுக்கு அழைத்து, இதுபற்றி அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர்.


குறித்த சிறுமி சில காலமாக மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹசலக்க பொலிஸாருக்கு இது தெரியும் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த யுவதி மினிபே 31 கால்வாய் பகுதியில் வசிப்பவராவார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த யுவதி - ஆற்றில் பாய்ந்து காப்பாற்றிய இளைஞர் குழு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த யுவதி - ஆற்றில் பாய்ந்து காப்பாற்றிய இளைஞர் குழு Reviewed by Madawala News on March 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.