இசையை ஆசை காட்டி சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைதுசிறுவர்கள் இருவரை இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 46வயதான நபரொருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனமல்வில – உடவலவ வீதியில் குக்குல்கடுவ பிரதேசத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த 46 வயதுடைய நபரொருவர் அப்பகுதியில் வசிக்கும் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பிலேயே தனமல்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபர் பிடகோட்டே பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், குக்குல்கடுவ பிரதேசத்தில் சுமார் பத்து ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அதே பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களிடம் தான் தனமல்வில நகரில் ஒரு இசை நிகழ்ச்சியை பார்க்கச் செல்வதாகவும், அவ்விருவரையும் வருமாறும் அழைத்துள்ளார்.

அதற்கு பணம் இல்லை என்று அவ்விரு சிறுவர்களும் கூறியுள்ளார். எனினும், தேவையான பணத்தை தருவதாக கூறி இரு சிறுவர்களையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று நிர்வாண புகைப்படங்களை காண்பித்துள்ளார். அதன்பின்னர் அவ்விரு இளைஞர்களையும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் முயற்சித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்களும் தங்களுடைய பெற்றோருக்கு அறிவித்ததையடுத்து, அது தொடர்பில் தனமல்வில பொலிஸாருக்கு பெற்றோர் அறிவித்தனர். சந்தேகநபர் கடந்த (10) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இசையை ஆசை காட்டி சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது இசையை ஆசை காட்டி சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது Reviewed by Madawala News on March 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.