விசா கிடைத்தும் கனடா செல்ல விருப்பம் இல்லை - கிணற்றில் குதித்து நபர் உயிரிழப்புகால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து திங்கட்கிழமை (11) கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார். அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.

இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் செவ்வாய்க்கிழமை (12) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
விசா கிடைத்தும் கனடா செல்ல விருப்பம் இல்லை - கிணற்றில் குதித்து நபர் உயிரிழப்பு விசா கிடைத்தும் கனடா செல்ல விருப்பம் இல்லை - கிணற்றில் குதித்து நபர் உயிரிழப்பு Reviewed by Madawala News on March 13, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.