வீதியில் கிடந்த பணப்பையை, உரிமையாளரை தேடி ஒப்படைத்த முஹம்மட் தஜ்மிலுக்கு பொலிஸார் பாராட்டு.ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்த நபர் ஒருவர் கண்டெடுத்த ஐம்பத்தெட்டாயிரம் ரூபா பணப்பையை ஹட்டன் பொலிஸாரின் ஊடாக உரிமையாளருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஹட்டன் காமினிபுர பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் முஹம்மட் தஜ்மில் என்பவர் ரமழான் நோன்பை முடித்துவிட்டு பள்ளிவாசலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது பள்ளியின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் கிடந்த பார்சலை எடுத்து சோதனையிட்ட போது அதில் ஐம்பத்தெட்டாயிரம் ரூபா பணம் மற்றும் உரிமையாளரின் அடையாள அட்டை, வங்கி அட்டைகள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் சிலவற்றை கண்டெடுத்துள்ளார் .

பின்னர், பார்சலை எடுத்த நபர், அட்டன் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபைக்கு அறிவித்து, அன்றைய தினம் ஹட்டன் தலைமையக பொலிஸாரிடம் பொதியை கையளித்துள்ளார்.

குறித்த பொதியின் உரிமையாளரை ஹட்டன் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் அவர் ஹட்டன் பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.தர்மரத்ன என்பவராவார்.

ஹட்டன் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.ரஞ்சித் ஜயசேன அவர்கள், பொதியின் உரிமையாளரை (23) அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து, பொதியை எடுத்து வந்த இளைஞன் முன்னிலையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார்.

தனக்குச் சொந்தமில்லாத ஒன்றை எடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த அப்துல் ரஹீம் முஹம்மட் தஜ்மிலுக்கு ஹட்டன் தலைமையக தலைமைப் பொலிஸ் பரிசோதகர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நன்றி தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

– ரஞ்சித் ராஜபக்ஷ
வீதியில் கிடந்த பணப்பையை, உரிமையாளரை தேடி ஒப்படைத்த முஹம்மட் தஜ்மிலுக்கு பொலிஸார் பாராட்டு. வீதியில் கிடந்த பணப்பையை, உரிமையாளரை தேடி ஒப்படைத்த முஹம்மட் தஜ்மிலுக்கு பொலிஸார் பாராட்டு. Reviewed by Madawala News on March 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.