நாட்டு மருந்துக் கடை ஒன்றில் போதைப்பொருள் விற்ற பெண் ஏராளமான போதைப்பொருள் பொதிகளுடன் கைதுஅகலவத்தை நகரிலுள்ள நாட்டு மருந்துக் கடை ஒன்றில் சுமார் நானூறு ரூபா பெறுமதியான போதைப்பொருள் இரண்டாயிரத்து நானூறு பொதிகளுடன் கடையின் உரிமையாளரான 55 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண், அகலவத்தையில் நாட்டு ஆயுர்வேத மருந்து கடை ஒன்றை நடத்தி வரும் ஓமட்டாவை சேர்ந்த பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்ற ஆரம்பிக்கப்பட்ட 'ஆபரேஷன் வோல்' என்ற திட்டத்தின் படி, அகலவத்தை நகரிலுள்ள அனைத்து ஆயுர்வேத மருந்து கடை உரிமையாளர்களும் அகலவத்தை பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு, பாடசாலை உட்பட எவருக்கும் இவ்வாறான போதைப்பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர்..
நாட்டு மருந்துக் கடை ஒன்றில் போதைப்பொருள் விற்ற பெண் ஏராளமான போதைப்பொருள் பொதிகளுடன் கைது நாட்டு மருந்துக் கடை ஒன்றில் போதைப்பொருள் விற்ற பெண் ஏராளமான போதைப்பொருள் பொதிகளுடன் கைது Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.