வழமை போல் இவ்வருடமும் கல்முனை அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ரமழான் சஹர் உணவு இலவச ஏற்பாடுஸஹர் உணவு விநியோகம்

கல்முனையிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் ஸஹர் உணவு இலவசமாக ஏற்பாடு செய்துதரப்படும்.

ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

ஸஹர் நேரத்தில் உங்கள் காலடிக்கே நேரில் வந்து ஸஹர் உணவு வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்!

வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களும், பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களிலிருந்து கல்முனைக்கு வருகை தருபவர்களும் ரமழான் மாதத்தில் ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து ஆறாவது ஆண்டுகளாக இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகிறது.

- கல்முனையன்ஸ் போரம்.

தகவல் : பஸ்மி காஸிம்
வழமை போல் இவ்வருடமும் கல்முனை அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ரமழான் சஹர் உணவு இலவச ஏற்பாடு வழமை போல் இவ்வருடமும் கல்முனை அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ரமழான் சஹர் உணவு  இலவச ஏற்பாடு Reviewed by Madawala News on March 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.