இன்று காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் இரு வெவ்வேறு பிரதேசங்களில் இருவர் மோதி உயிரிழந்தனர்.



கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் ராகம பகுதியில் இரு இடங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


ராகம புகையிரத கடவை மற்றும் ராகம துடுவேகெதர பிரதேசத்தில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று (30) காலை 8:45 மணியளவில் ராகம புகையிரத கடவையில் உள்ள புகையிரத வாயிலின் ஊடாக செல்ல முற்பட்ட 24 வயதுடைய நபரொருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகம விஹார மாவத்தையில் வசிக்கும் இளைஞரே என தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தின் பின்னர் மீண்டும் கொழும்பு நோக்கி சென்ற ரயில் ராகம துடுவேகெதர பகுதியில் சென்ற போது திடீரெனே ஒருவர்  பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என்பதுடன் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்று காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் இரு வெவ்வேறு பிரதேசங்களில் இருவர் மோதி உயிரிழந்தனர். இன்று காலை  கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் இரு வெவ்வேறு பிரதேசங்களில் இருவர் மோதி உயிரிழந்தனர். Reviewed by Madawala News on March 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.