மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த நபரை தட்டிக்கேட்ட கணவன் மனைவி மீது கோடாரியால் தாக்கிய குடிகாரர் - மனைவி பலி, கணவன் படுகாயம்.நபரொருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன் கணவன் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த கொடூர சம்பவம் நேற்றிரவு (29) திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தில் அக்போபுர - 85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :-


குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட அவர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்ததுடன் கணவன் பலத்த வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த நபரை தட்டிக்கேட்ட கணவன் மனைவி மீது கோடாரியால் தாக்கிய குடிகாரர் - மனைவி பலி, கணவன் படுகாயம். மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த நபரை தட்டிக்கேட்ட கணவன் மனைவி மீது கோடாரியால் தாக்கிய குடிகாரர் - மனைவி பலி, கணவன் படுகாயம். Reviewed by Madawala News on March 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.