கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தகத்தை வாசிக்க நான் ஆர்வம் காட்டவில்லை..இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களை கோடிட்டுக் காட்டும் தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகத்தை தான்இன்னும் படிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய பசில் ராஜபக்ஷ, தனது சகோதரரிடமிருந்து புத்தகத்தின் நகலையோ அல்லது டிஜிட்டல் பிரதியையோ பெறவில்லை என்றும் ஒரு பிரதியை வாங்குவதிலோ அல்லது புத்தகத்தைப் படிப்பதற்கோ தான் ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார்.


புத்தகம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ராஜபக்ச, தனது சகோதரர் புத்தகத்திற்கான விவரங்களை சேகரிப்பதை அறிந்திருப்பதாக வெளிப்படுத்தினார்,

மேலும் புத்தகத்தில் உள்ள சில விவரங்களை மற்றவர்களிடமிருந்து கேட்டதாகவும், ஆனால் இன்னும் படிக்கவில்லை என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து அதில் தான் கோபமாக இருப்பதாகக் எழுதப்பட்டு இருந்ததை மறுத்து, அவை வெறும் வதந்திகள் என்று குறிப்பிட்டார்.


கோட்டாபய ராஜபக்ஷவுடனான உறவு குறித்தும், இருவருக்குமிடையில் ஏதேனும் பகைமை இருந்தால், தேவையான விடயங்களுக்காக பேசி வருவதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தகத்தை வாசிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.. கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தகத்தை வாசிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.. Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.