பேஸ்புக் மூலம் பல யுவதிகளை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது.



மாடலிங் துறைக்கு யுவதிகளை இணைத்துக் கொள்வதாக முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட போலி வைத்தியர் ஒருவர் கண்டி - ராஜவெல்லவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுமார் 15 யுவதிகள் இரகசிய பொலிஸில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிரனீத் லக்மால் என்ற சந்தேக நபர் இன்று (14) இரவு கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மாடலிங் துறையில் வேலைக்கு சேர்த்துக் கொள்வதாக
முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேகநபரின் பேச்சை நம்பிய இளம் பெண்கள் , அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்பி உள்ளனர்.

பின்னர் தேர்வு தான் செய்த ஒவ்வொரு இளம் பெண்னையும் நேர்காணலுக்கு அழைத்துள்ளார்.

தன்னை வைத்தியராகவும் காட்டிக் கொண்ட சந்தேகநபர், நேர்காணலின் போது யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தி அவர்களை பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் மூலம் பல யுவதிகளை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது. பேஸ்புக் மூலம் பல யுவதிகளை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது. Reviewed by Madawala News on March 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.