பெண்ணின் வாயை வெட்டுவதாக பொதுஜன பெரமுன M.P அச்சுறுத்தியது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தம்மை தொலைபேசியில் வாயை வெட்டுவதாக அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் இணைப்புச் செயலாளரான பெண் ஒருவர் அளித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பேராதனை காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த பெண் தமது கருத்தை திரிபுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பில் தாமும் பேராதனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தி சேவை வினவிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் மகளிர் விவகாரம், முன்பள்ளிகள் மற்றும் அழகு துறை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளரான தக்ஷிலா செனவிரத்ன என்ற பெண்ணே பேராதனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Video

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார விடுத்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தலையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
பெண்ணின் வாயை வெட்டுவதாக பொதுஜன பெரமுன M.P அச்சுறுத்தியது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம். பெண்ணின் வாயை வெட்டுவதாக பொதுஜன பெரமுன M.P அச்சுறுத்தியது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம். Reviewed by Madawala News on March 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.