வித்தியாச சீருடையில் போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து சோதனையில் களமிறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் .மஹியங்கனை - கண்டி பிரதான வீதியின் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) பொது மக்கள் இதுவரை காணாத சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசேட போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.


குறித்த போக்குவரத்து பரிசோதனை இன்று (30) காலை 08.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெற்றது.


மஹியங்கனை மாபகதேவ்வ பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் பயிலுனர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 240 பேர் இதில் பங்கு கொண்டனர்.

யுக்திய நடவடிக்கையுடன் பதுளை மாவட்டப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் சோதனைகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பரிசோதனைக்காக அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ரிதிமாலியத்த, அகிரியன் கும்புர, லொக்கலோயா, தம்பன 51 தபால் நிலையம், வெரகந்தோட்டை பாலத்திற்கு அருகில், சொரபொர சந்தி ஆகிய 06 இடங்களில் போக்குவரத்தை சரிபார்க்க இந்த புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வித்தியாச சீருடையில் போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து சோதனையில் களமிறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் . வித்தியாச சீருடையில் போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து சோதனையில் களமிறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் . Reviewed by Madawala News on March 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.