செயலிழந்த லிப்ட்டை சீர் செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம்.மத்திய தபால் பரிவர்த்தனை கட்டடத்தில் சுமார் ஒரு வருட காலமாக செயலிழந்த நிலையில் உள்ள கட்டிடத்தின் மின்தூக்கியை சீர் செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (10) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க முன்னணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மின்தூக்கி செயலிழந்த நாள் முதல் தபால்களை எடுத்துச் செல்வதில் தபால் ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலம் தபால் அதிகாரிகளின் கவனம் மின்தூக்கியின் மீது செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் இல்லையேல் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேச்சாளர் தெரிவித்தார்
செயலிழந்த லிப்ட்டை சீர் செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம். செயலிழந்த லிப்ட்டை சீர் செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம். Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.