மாணிக்கக்கல் விற்பனை செய்த ஆடை வர்த்தகரை கடத்தி சென்று கட்டிவைத்து அடி - 35 இலட்சம் கப்பமும் பொலிஸாரால் முறியடிப்புமாணிக்கக்கல் விற்பனை தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹொரணையில் ஆடை விற்பனை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.


கடத்தல்காரர்கள் வர்த்தகரை விடுவிக்க அவரது மனைவியிடம் 35 இலட்சம் ரூபா கப்பம் கோரியதையடுத்து மொரகஹஹேன பொலிஸார் கப்பம் கோருபவர்களை மிக நுணுக்கமாக பொறிவைத்து பிடித்துள்ளனர்.

சிலாபத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் ஹொரணை கோறளைம தெவத்தபர பிரதேசத்தில் வசிக்கும் ஆடை வியாபாரியிடம் மாணிக்கக்கல்லை விற்பனை செய்து தருமாறு கூறியிருந்தார்.


வர்த்தகர், மஹரகம பிரதேசத்தில் உள்ள சாந்த என்ற நண்பரின் ஊடாக 10 இலட்சம் ரூபாவிற்கு மாணிக்கக்கல்லை கொள்வனவாளர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.


பிலியந்தலை பகுதியிலுள்ள வீதியொன்றுக்கு அருகாமையில் இந்த பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளதுடன், பின்னர் குறித்த மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்பவர் சாந்த என்ற நபரிடம் சில நாட்களுக்குப் பின்னர் அந்த மாணிக்கக்கல் போலியானது என தெரிவித்துள்ளார்.


மஹரகம சாந்த என்ற நபர் மேலும் மூவருடன் மதியம் 1.00 மணியளவில் ஆடை வியாபாரியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஏதோ சொல்ல வேண்டும் எனக் கூறி வர்த்தகரை காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.


வியாபாரியை திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அடித்து பல நாட்கள் தடுத்து வைத்திருந்ததுடன், வர்த்தகரின் விடுதலைக்காக 35 இலட்சம் ரூபா கப்பம் கோரி அவரது மனைவிக்கு கடத்தல்காரர்கள் தொலைபேசியில் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வர்த்தகரின் மனைவி மொரகஹஹேன பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில் கப்பம் தொகையை 10 இலட்சம் ரூபாவாக குறைத்து வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் மில்லவத்த பிரதேசத்தில் வைத்து கப்பப் பணத்தை பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்த போதே மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணிக்கக்கல் விற்பனை செய்த ஆடை வர்த்தகரை கடத்தி சென்று கட்டிவைத்து அடி - 35 இலட்சம் கப்பமும் பொலிஸாரால் முறியடிப்பு மாணிக்கக்கல் விற்பனை செய்த ஆடை வர்த்தகரை கடத்தி சென்று கட்டிவைத்து அடி - 35 இலட்சம் கப்பமும் பொலிஸாரால் முறியடிப்பு Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.