வனிந்து ஹசரங்க வேண்டுமென்றே தேர்வு செய்யப்படவில்லை - குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் மறுப்புஎதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இடைநிறுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு நட்சத்திரப் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க வேண்டுமென்றே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் மஹிந்த ஹலங்கொட, தவறான தகவல்கள் ஊடகங்களுடன் பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இந்த கூற்றுகளை தெளிவுபடுத்திய ஹலங்கொட, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்த வனிந்து ஹசரங்க, சில வாரங்களுக்கு முன்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக வனிந்து ஹசரங்க முடிவை மாற்றுவது குறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக ஹலங்கொட மேலும் தெரிவித்தார்.

“இந்தக் கடிதம் முன்னதாகவே SLC தேர்வாளர்களிடம் கிடைக்கப்பெற்றது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க தேர்வாளர்கள் முடிவு செய்தனர். உலகக் கோப்பைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நாளை வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட்டில் ஆரம்பமாக உள்ளது.
வனிந்து ஹசரங்க வேண்டுமென்றே தேர்வு செய்யப்படவில்லை - குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் மறுப்பு வனிந்து ஹசரங்க வேண்டுமென்றே தேர்வு செய்யப்படவில்லை - குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் மறுப்பு Reviewed by Madawala News on March 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.