கடும் சூடான காலநிலை - சூடானில் அனைத்து பாடசாலைகளையும் இரண்டு வார காலத்திற்கு மூட நடவடிக்கை



கடும் வெப்பமான காலநிலையை எதிர்நோக்கும் தெற்கு சூடான் அரசாங்கம் அனைத்து பாடசாலைகளையும் இரண்டு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன...

தங்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என அந்நாட்டு சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெற்கு சூடான் அரசாங்கம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, அரசு உத்தரவை மீறி திறக்கப்படும் பள்ளிகளின் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் சூடான காலநிலை - சூடானில் அனைத்து பாடசாலைகளையும் இரண்டு வார காலத்திற்கு மூட நடவடிக்கை கடும் சூடான காலநிலை - சூடானில் அனைத்து பாடசாலைகளையும் இரண்டு வார காலத்திற்கு மூட நடவடிக்கை Reviewed by Madawala News on March 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.