கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வுகண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளிற்கிணங்க கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அவர்களது ஒத்துழைப்புடன் இமாதுதீன் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு நேற்றைய தினம் கடுகண்ணாவை குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.

ஜனாஸா குளிப்பாட்டும் முறை, ஜனாஸா கஃபனிடும் முறை,
ஜனாஸா தொழுகை, மற்றும் ஜனாஸா குறித்த ஏனைய இஸ்லாமிய வழிகாட்டல்கள் செயன்முறை பயிற்சி உடன் கூடிய வகையில் பயிற்றுவிக்கப்பட்டன.

“ஒரு மனிதன் மரணித்த பின்னர் அந்த மனிதனின் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை எமது சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே மேற்குறித்த இந்நிகழ்வு நடத்தப்பட்டது.”

மேலும் இந்நிகழ்வில் வளவாளராக பங்கேற்ற அல்ஹாஜ் நுஃமான் அவர்கள், கண்டி மாவட்ட வக்ப் சபையின் பொறுப்பதிகாரி ஸியாத் அவர்கள், குறுக்குதலை ஜனாஸா நலன்புரி அமைப்பின் மற்றும் பள்ளிவாயலின் நிர்வாக அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள், இமாதுதீன் அமைப்பின் சார்பில் வதூத், பிர்தௌஸ் மற்றும் ரூமி ஆகியோருடன் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.