அதிக மது அருந்தும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர் அன்றிரவே மரணம்.அதிக மது அருந்தியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியின் போது அதிக அளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்பிராய் பிரிவில் வசிக்கும் கணேசன் ராமசந்திரன் (வயது 38) என்பவதே உயிரிழந்துள்ளார் இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவர்..

தோட்ட கோவிலில், மார்ச் 27ஆம் திகதி வருடாந்திர தேர் திருவிழா நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழுவினர் அதிக அளவில் மது அருந்துபவர்களை தேர்வு செய்யும் போட்டியை நடத்தினர்.

அதே தோட்டத்தில் வசிக்கும் 3 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில், மூன்று 750 மில்லி மதுபாட்டில்கள் வழங்கப்பட்டு, குறைந்த நேரத்தில் மது பாட்டில் குடிப்பவரை வெற்றியாளராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னரும் அவர் அதிகளவில் மது அருந்தி இருந்ததாக தெரியவருகின்றது.


போட்டியில் பங்கேற்று வெற்றியீட்டியதன் பின்னர், இரவு வீட்டுக்கு வந்த தனது தந்தை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அதிகாலை (28) தூக்கத்திலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் கலந்துகொண்ட மற்றுமொருவர் கடுமையாக சுகவீனமடைந்ததையடுத்து கிளங்கன்-டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

​​நிமோனியா காய்ச்சல் மற்றும் கழுத்து நரம்பில் உணவு அடைப்பு காரணமாக கணேசன் ராமசந்திரன் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உடலின் பல பாகங்கள் அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிக மது அருந்தும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர் அன்றிரவே மரணம். அதிக மது அருந்தும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர் அன்றிரவே மரணம். Reviewed by Madawala News on March 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.