லண்டன் நோக்கி சென்ற விமானத்தினுள் பயணி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் பதிவுதாய்லாந்து - பாங்காக்கில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானத்தில் பயணி ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் விமானத்தினுள் பரபரப்பை ஏற்படுத்தியது

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த EVA Air Flight BR67 இல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் நீண்ட நேரம் டாய்லெட்டில் தங்கியிருந்ததால், இந்த பயணி தற்கொலைக்கு முயன்றதாக விமான ஊழியர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஆண் பயணி கடுமையான கவலையுடன் இருந்த அதேவேளை காயங்களுக்கும் உள்ளாகி இருந்துள்ளார்.

பின்னர், விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த நபருக்கு உதவியதுடன், லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் நோக்கி சென்ற விமானத்தினுள் பயணி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் பதிவு லண்டன் நோக்கி சென்ற விமானத்தினுள் பயணி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் பதிவு Reviewed by Madawala News on March 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.