விளையாட்டாக சக ஊழியரின் ஆசனவாயில் ஏர் டியூப்பை (கம்ப்ரசர் டியூப்) மாட்டி காற்றடித்ததில் அவர் குடல் வெடித்து உயிரிழப்பு - இருவர் பொலிஸாரால் கைதுமாபிம பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பழுது பார்க்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் விளையாட்டாக ஆசனவாயில் ஏர் டியூப்பை (கம்ப்ரசர் டியூப்) மாட்டி குடல் வெடித்து இறந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.


பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த 25ஆம் திகதி இந்த இளைஞனின் ஆசனவாயில் நிறுவன ஊழியர்கள் இருவர் விளையாட்டாக கம்ப்ரஸர் குழாயை பிடித்து காத்தடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ​​வயிற்றில் (குடலில்) காற்று பரவி ஆபத்தான நிலையில் இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (29) இரவு உயிரிழந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஊழியர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டாக சக ஊழியரின் ஆசனவாயில் ஏர் டியூப்பை (கம்ப்ரசர் டியூப்) மாட்டி காற்றடித்ததில் அவர் குடல் வெடித்து உயிரிழப்பு - இருவர் பொலிஸாரால் கைது விளையாட்டாக சக ஊழியரின் ஆசனவாயில் ஏர் டியூப்பை (கம்ப்ரசர் டியூப்) மாட்டி காற்றடித்ததில் அவர் குடல் வெடித்து உயிரிழப்பு - இருவர் பொலிஸாரால் கைது Reviewed by Madawala News on March 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.