நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகளால் கைது.கம்பளை பிரதேசத்தில் உள்ள பிரபல அரச மற்றும் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கம்பளை புகையிரத பாதையில் மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த மாணவர்கள் தினசரி ரமழான் நோன்பை திறந்த பின்னர் மேற்கண்ட இடத்தில் கஞ்சா புகைப்பதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், கம்பளை பிரதான நீதவான் திருமதி வாசனா நவரத்ன அவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாவும் பன்னிரண்டாயிரம் ரூபாவும் அபராதம் விதித்தார்.


கம்பளை கஹடபிட்டிய, கண்டிவீதி , பபில மற்றும் சிங்கபிட்டிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த மாணவர்கள் கம்பளை நகரின் பிரபல வர்த்தகர்கள் நால்வரின் பிள்ளைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாணவர்களிடம் இருந்து 365, 657, 680, 273 மில்லி கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு, அந்த தொகையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது

நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகளால் கைது. நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை  ஒழிப்பு  அதிகாரிகளால் கைது. Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.