ஐ. எம். எப் இன் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை ; ஜனாதிபதிசர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.


நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
ஐ. எம். எப் இன் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை ; ஜனாதிபதி ஐ. எம். எப் இன் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை ; ஜனாதிபதி Reviewed by Madawala News on March 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.