பெளத்த தேரரை கொன்றது தொடர்பில் கைதான நபர், பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி.கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட மோதலில் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மொனராகலையில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேச பௌத்த பிக்கு மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துப்பாக்கிதாரியே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டார்.குறித்த நபர் அத்தனகல்ல, யதவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்க அழைத்து செல்லும் போது தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதன்போது ஏற்பட்ட மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெளத்த தேரரை கொன்றது தொடர்பில் கைதான நபர், பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி. பெளத்த தேரரை கொன்றது தொடர்பில் கைதான நபர், பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி. Reviewed by Madawala News on March 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.