வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு வரும் முறை அறிமுகம்.இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றார்.
வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு வரும் முறை அறிமுகம். வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு வரும் முறை அறிமுகம். Reviewed by Madawala News on March 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.