வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் முச்சகரவண்டியில் மோதி பலிமோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து மினிப்பே பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி பெண் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் எதிரே வந்த ஓட்டோ மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

ஓட்டோ சாரதியும், அதில் பயணித்த இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் முச்சகரவண்டியில் மோதி பலி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் முச்சகரவண்டியில் மோதி பலி Reviewed by Madawala News on March 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.