நான்கு முன்னணி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆண்டு IPL இல் விளையாட முடியாமல் போகும்.இலங்கை கிரிக்கெட் வீரர்களான துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் என தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை ஐபிஎல் முடிந்த சில நாட்களில் ஆரம்பமாக இருக்கும் நிலையில், முழு உடல் தகுதி இல்லாத மற்றும் காயங்களில் இருந்து மீண்ட வீரர்களை விடுவிப்பதைத் தவிர்க்க இலங்கை கிரிக்கெட் (SLC) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டித்தொடரில் பங்கேற்க அழைக்கப்பட்ட வனிந்து ஹசரங்க அணியில் தொடர்ந்து இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஹசரங்க, குதிகால் காயத்துடன் பங்களாதேஷ் தொடரில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இலங்கையைச் சேர்ந்த மகேஷ் தீக்ஷனா மற்றும் நுவன் துஷாரா ஆகியோர் மாத்திரமே அந்தந்த ஐபிஎல் அணிகளில் இணைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முதல் போட்டியில் மோத உள்ளது.
நான்கு முன்னணி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆண்டு IPL இல் விளையாட முடியாமல் போகும். நான்கு முன்னணி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆண்டு IPL இல் விளையாட முடியாமல் போகும். Reviewed by Madawala News on March 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.