இலங்கை பணத்தாள்களை பயன்படுத்தி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களைத் தயாரித்தால், 25 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும்செல்லுபடியாகும் நாணயத் தாள்களை
ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு பயன்படுத்துதல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக அவ்வாறான செயற்பாடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

நாணயத் தாள்களைப் பயன்படுத்தி பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்குவது சமூகத்தில் ஒரு அலையாக மாறியுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அனுமதியின்றி நாணயத் தாள்களை சிதைப்பது தவறு எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் முன் இவ்வாறான குற்றச் செயல் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25 மில்லியன் ரூபாவுக்கு மிகாமல் அபராதம் அல்லது மூன்று வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிடுகிறது.
இலங்கை பணத்தாள்களை பயன்படுத்தி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களைத் தயாரித்தால், 25 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் இலங்கை பணத்தாள்களை பயன்படுத்தி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களைத் தயாரித்தால், 25 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் Reviewed by Madawala News on March 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.