சீன பெரிய வெங்காயம் இலங்கை வருகிறது ..சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.


இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.


இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு அறவிடப்படும் 70 ரூபா வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இளஞ்சிவப்பு வெங்காயத்தின் விலை 500 ரூபாவிற்கும் அதிகமாக காணப்படுகின்றது.

சீன பெரிய வெங்காயம் இலங்கை வருகிறது .. சீன பெரிய வெங்காயம் இலங்கை வருகிறது .. Reviewed by Madawala News on March 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.