கோட்டை நீதவானை கொல்ல சதிகோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.


கோட்டை நீதவான் திலின கமகேவை  T81 கிரனேட் லாஞ்சர் மூலம் தாக்குதல். நடத்தி கொலை செய்ய முயற்சிப்பதாக தகவல் வழங்கிய கடிதம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் பணிப்புரை பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


நீதவானை கொல்வதற்காக ஒருவர் தொலைபேசி மூலம் இந்தத் துப்பாக்கியைக் கோரியதாக தகவல் கொடுத்தவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த உளவு கடிதத்தில் துப்பாக்கியை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுத்த நபரின் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டை நீதவானை கொல்ல சதி கோட்டை நீதவானை கொல்ல சதி Reviewed by Madawala News on March 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.