பெசில் தலைமையில் இன்று மூன்று முக்கிய கலந்துரையாடல்கள்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த 3 கலந்துரையாடல்கள் இன்று(20) இடம்பெறவுள்ளன.


கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.


முதலாவது கலந்துரையாடல் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனும்


பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இரண்டாவது கலந்துரையாடலும்


தொழில்முறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்றாவது கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவுள்ளது.


இந்த கலந்துரையாடல்களின் போது எதிர்வரும் தேர்தலில் கட்சி எவ்வாறு போட்டியிட வேண்டும் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.


இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் பசில் ராஜபக்ஸ இடையில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.இதன்போது, கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரை  ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது பொருத்தமற்றது என பெரும்பான்மையானவர்கள் தெரிவித்திருந்தனர்.


அத்துடன், பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது பொருத்தமானது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெசில் தலைமையில் இன்று மூன்று முக்கிய கலந்துரையாடல்கள். பெசில் தலைமையில் இன்று மூன்று முக்கிய கலந்துரையாடல்கள். Reviewed by Madawala News on March 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.