இந்த மாதம் ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என நாம் ஏற்கனவே எச்சரித்தோம் ; அமெரிக்கா அறிவிப்புமார்ச் மாதம் ரஷ்யாவின் மொஸ்கோவில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகளை முன்கூட்டியே எச்சரித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மொஸ்கோவில் நேற்று (22) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், மொஸ்கோ மக்கள் அதிகம் கூடும் திருவிழா அல்லது நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்த மாத தொடக்கத்தில் ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், இது வேறு நோக்கத்துடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை என்று ரஷ்யா அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு பயங்கரவாத தாக்குதல் அபாயம் குறித்து அமெரிக்க அரசாங்கம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த மாதம் ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என நாம் ஏற்கனவே எச்சரித்தோம் ; அமெரிக்கா அறிவிப்பு இந்த மாதம் ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என நாம் ஏற்கனவே எச்சரித்தோம் ; அமெரிக்கா அறிவிப்பு Reviewed by Madawala News on March 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.