அளுத்கம நகரில் சொகுசு வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதி முற்றுகை - 8 பெண்களும் ஆண் ஒருவரும் கைதுஅளுத்கம நகரில் சொகுசு வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பெண்களையும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கொஸ்கொட, பலபிட்டிய, அளுத்கம, களுத்துறை, பேருவளை, பெந்தர, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம நகரில் உள்ள வாராந்த சந்தை அமைந்துள்ள வளாகத்திற்கு அருகில் உள்ள சொகுசு மாடி வீடொன்றின் மேல் மாடியில் இந்த சூதாட்ட நிலையம் நடத்தப்பட்டுள்ளது.

சொகுசு மாடி வீட்டின் கீழ் தளத்தில் அழகு கலை நிலையம் நடத்துவது போன்ற போர்வையில் இந்த சூதாட்ட நிலையம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அளுத்கம பொலிஸாரினால் உளவாளி ஒருவரை பயன்படுத்தி சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த பெண்களும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அளுத்கம நகரில் சொகுசு வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதி முற்றுகை - 8 பெண்களும் ஆண் ஒருவரும் கைது அளுத்கம நகரில் சொகுசு வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதி முற்றுகை - 8 பெண்களும் ஆண் ஒருவரும் கைது Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.