விளையாட்டில் தோல்வியடைந்ததற்கு தண்டனை என்ற ரீதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 பேர் கைதுமட்டக்களப்பு - வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11 சிறுவனுடன் விளையாட்டில் தோல்வியடைந்த தண்டனை என்ற ரீதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மோற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் எனைய 14,15,18 வயதுடைய நண்பர்களுக்கும் இந்த சூட்சமத்தை தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுமியுடன் தனிதனியாக சிறுவர்கள் சென்று விளையாட்டு என்ற போர்வையில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்ட தையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்று புதன்கிழமை (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிநீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்கு உட்படுத்துமாறும், அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவத்ததுடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விளையாட்டில் தோல்வியடைந்ததற்கு தண்டனை என்ற ரீதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 பேர் கைது விளையாட்டில் தோல்வியடைந்ததற்கு தண்டனை என்ற ரீதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 பேர் கைது Reviewed by Madawala News on March 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.