தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது.சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறையொன்றில் இரண்டு பிள்ளைகளின் தாயை கொன்ற சந்தேக நபர், அதிகளவு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதால், ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


மடங்வல, பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.

27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த 14ஆம் திகதி ரத்தொலுவ முத்துவடியா வீதியிலுள்ள தங்கும் அறையொன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.


அநுராதபுரம் பாமுகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான திலினி சசிகலா பிரியபாஷினி என்ற பெண்மணி ஆவார்.


22 வயதுடைய இந்த இளைஞனுடன் சில காலமாக தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சீதுவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துக்குப் பிறகு, தங்கும் அறைக்குச் சென்ற போலீஸார், அந்த அறையில் தூக்கில் தொங்க தயாராக கயிறு கட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கவனித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு தயாராகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற 13ஆம் திகதி இரவு இந்த அறையில் இருந்த சந்தேக நபர் மறுநாள் காலை அறையை விட்டு வெளியேறியதை விடுதியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

கொலையின் பின்னர், சந்தேகநபர் தொலைபேசியில் தனது நண்பரிடம் முழு சம்பவத்தையும் ஒப்புக்கொண்டார்.
தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது. தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது. Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.