தேயிலை தோட்டத்தில் 17 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பின்னணியில் சகோதரியின் கணவருடன் இருந்த தவறான தொடர்பு என தகவல் வெளியானது.எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் 17 வயது யுவதியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


குறித்த யுவதி தல்கஹாவத்தை, கரந்தெனிய பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும், தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரும் சந்தேகநபரான மூத்த சகோதரியின் கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக யுவதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்றுள்ளார்.

யுவதியை கடத்திச் சென்ற சந்தேகநபர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேயிலை தோட்டத்தில் 17 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பின்னணியில் சகோதரியின் கணவருடன் இருந்த தவறான தொடர்பு என தகவல் வெளியானது. தேயிலை தோட்டத்தில் 17 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பின்னணியில் சகோதரியின் கணவருடன் இருந்த தவறான தொடர்பு என தகவல் வெளியானது. Reviewed by Madawala News on March 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.