14 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 36 வயது தந்தை கைது



வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வியாழக்கிழமை (21) பாடசாலைக்கு சென்றுள்ளார். தனக்கு நேர்ந்ததை தன்னுடைய சக தோழியிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த தோழி, ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில்,  தாய் வீட்டில் இல்லாத போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுடன்,


 சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந் சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

14 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 36 வயது தந்தை கைது 14 வயது மகளை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 36 வயது தந்தை கைது  Reviewed by Madawala News on March 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.