பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள் தொடர்பில் யாரும் பயப்பட வேண்டாம் ; நாசா தெரிவிப்புசுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.


2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.


அபாயகரமான அந்த சிறுகோள், சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும்.


என்றாலும், அந்த சிறுகோள் பூமியின்மீது மோதும் அபாயம் இல்லை என நாசா கூறியுள்ளது.


Dr Minjae Kim என்னும் அறிவியலாளர் இது குறித்துக் கூறும்போது, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது என்பதால், அதைக்குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை என்கிறார்.


நமது சூரிய அமைப்பில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 2,350 சிறுகோள்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள் தொடர்பில் யாரும் பயப்பட வேண்டாம் ; நாசா தெரிவிப்பு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள் தொடர்பில் யாரும் பயப்பட வேண்டாம் ;  நாசா தெரிவிப்பு Reviewed by Madawala News on February 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.