பறகஹதெனிய தேசிய பாடசாலை மாணவர்களின் சேதமுற்ற புத்தகப்பைகளை இலவசமாக மீள்திருத்தும் நிகழ்வுபறகஹதெனிய தேசிய பாடசாலை மாணவர்களின் சேதமுற்ற பாடசாலை புத்தகப் பைகளை இலவசமாக மீள் திருத்திக் கொடுக்கும் ஒரு நிகழ்வு Batch 2005 ஐச் சேர்ந்த பழைய மாணவ சகோதரர் A.T.Azhar Ali மற்றும் Batch 2007 ஐச் சேர்ந்த சகோதரர் A.T.Asad Ali ஆகியோரின் பங்களிப்பில்,கௌரவ அதிபர் I.Abdul Rahuman உள்ளிட்ட பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கமைப்பில் இன்று, 15/02/2024, காலை 8 மணி முதல் பாடசாலையில் நடைபெற்றது. ஏறத்தாழ 175 புத்தகப்பைகளளவில் மீள் திருத்தப்பட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உச்ச பட்ச பயனை அடைந்தனர்.

இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு சார்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் Fahim Amanulla “இன்றைய பொருளாதாரச் சூழலில் இச்செயல் திட்டம் காலத்தின் கட்டாயமாக இருப்பதுடன் இது பாராட்ட வேண்டிய ஒரு முன்னோடியான முன்னெடுப்பு” என்று கருத்துத் தெரிவித்ததுடன்,
காலத்தின் அவசியத்தை உணர்ந்து தன்னார்வத்துடன் முன்வந்து இந்த அறப்பணியை முன்னெடுத்த பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களான
Kandy Leather Industries,
Samodaya Niwasa
Mawatagama
(Behind Luxman Studios) நிறுவன உரிமையாளர் சகோதரர் A.T.Azhar Ali மற்றும் Wayamba Cushions, Samodaya road,Mawatagama உரிமையாளர் சகோதரர்
A.T Asad Ali, பழைய மாணவர் சங்கத்துக்கு பாடசாலை சார்பில் தன் ஒத்துழைப்பை தொய்வின்றி வழங்கும் ஜனாப் Fayas Fausan ஆசிரியர் மற்றும் அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கிய அதிபர் ஜனாப் I.Abdul Rahuman ஆகியோருக்கு பழைய மாணவர் சங்கம் சார்பில் தன் மனப்பூர்வமான நன்றியையும் தெரிவித்தார்.


பறகஹதெனிய தேசிய பாடசாலை மாணவர்களின் சேதமுற்ற புத்தகப்பைகளை இலவசமாக மீள்திருத்தும் நிகழ்வு பறகஹதெனிய தேசிய பாடசாலை மாணவர்களின் சேதமுற்ற புத்தகப்பைகளை இலவசமாக மீள்திருத்தும் நிகழ்வு Reviewed by Madawala News on February 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.