பாஸ்போர்ட் எடுக்க வந்தவர் திடீரென மரமொன்றில் ஏறி, 'மேலுலகம்' செல்வேன் என அபாய அறிவிப்பு விடுத்தமையால் பரபரப்பு.கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரமொன்றில் திடீரென ஏறி அபாய அறிவிப்பு விடுத்தமையால் வவுனியா பிராந்திய காரியாலய பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 


திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51வயதுடைய அநுரகுமார என்பவர், வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக கடந்த மூன்று தினங்களாக வந்து சென்றதாகவும் எனினும், தனக்கு கடவுச்சீட்டை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.  


இதனால், விரக்தி அடைந்த குறித்த நபர் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி தன்னுயிரை மாய்ப்பேன் என கூறி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் 


இதனையடுத்து காரியாலய உத்தியோகத்தர்கள்   கடவுச்சீட்டு இன்றையதினம் (வௌ்ளிக்கிழமை) பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர்.  இதனை தொடர்ந்து குறித்த நபர் மரத்திலிருந்து கீழ் இறங்கினார்.

பாஸ்போர்ட் எடுக்க வந்தவர் திடீரென மரமொன்றில் ஏறி, 'மேலுலகம்' செல்வேன் என அபாய அறிவிப்பு விடுத்தமையால் பரபரப்பு. பாஸ்போர்ட் எடுக்க வந்தவர் திடீரென மரமொன்றில் ஏறி,  'மேலுலகம்' செல்வேன் என அபாய அறிவிப்பு விடுத்தமையால் பரபரப்பு. Reviewed by Madawala News on February 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.