தொழில் செய்யும் இடத்திலிருந்து ட்ரான்ஸ்பர் பண்ணியதால் அரச உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் #இலங்கைபணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை (11) தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
தொழில் செய்யும் இடத்திலிருந்து ட்ரான்ஸ்பர் பண்ணியதால் அரச உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் #இலங்கை தொழில் செய்யும் இடத்திலிருந்து ட்ரான்ஸ்பர் பண்ணியதால் அரச உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் #இலங்கை Reviewed by Madawala News on February 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.