முருங்கக்காய் விலை விண்ணை தொட்டது - அதிகரித்திருந்த ஏனைய மரக்கறிகள் விலை குறைந்தன.நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாக பதிவாகியிருந்தது. இதையடுத்து இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் நேற்று முருங்கை விற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை நேற்று (08) 700 ரூபாவாக உள்ளது என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மைய காலங்களில் அதிகரித்திருந்த காய்கறி விலைகளுடன் ஒப்பிடுகையில், பேலியகொட புதிய மெனிங் சந்தையில் காய்கறி விலைகள் குறைந்துள்ளன.

போஞ்சி ரூ. 500 ஆக இருப்பினும், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் ஆகியவை முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 1,100 என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முருங்கக்காய் விலை விண்ணை தொட்டது - அதிகரித்திருந்த ஏனைய மரக்கறிகள் விலை குறைந்தன. முருங்கக்காய் விலை விண்ணை தொட்டது - அதிகரித்திருந்த ஏனைய மரக்கறிகள் விலை குறைந்தன. Reviewed by Madawala News on February 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.